காடுவெட்டி குரு ‌பிணை மனுக்கள் தள்ளுபடி!

வியாழன், 24 ஜூலை 2008 (10:16 IST)
பிணை‌யி‌ல் ‌விடுதலை செ‌ய்ய‌க் கோ‌ரிய காடுவெ‌‌ட்டி குரு‌வி‌ன் இர‌ண்டு மனு‌க்களை பெரம்பலூர் மாவட்ட அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌‌ம் த‌ள்ளுபடி செ‌ய்தது.

வன்னியர் சங்க மாநில தலைவரான காடுவெட்டி குரு, அ.இ.அ.தி.மு.க. பிரமுகர் குணசேகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், கவுன்சிலர் செல்வி செல்வம் வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய வழக்கு தொடர்பாகவும் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கொலை மிரட்டல் மற்றும் வெடிகுண்டு வீசிய 2 வழக்குகளிலும் காடுவெட்டி குருவி‌ற்கு ‌பிணை ‌விடுதலை வழங்க வேண்டும் என்று கோரி பா.ம.க. சார்பில் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் பாலு, ஸ்ரீகாந்த், சிவக்குமார் மற்றும் செலஸ்டின் ஆகியோர் பெரம்பலூர் மாவட்ட அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது நீதிபதி கலாவதி விசாரணை நடத்தினார். அ‌ப்போது, அரசு தரப்பில் வழ‌க்க‌றிஞ‌ர் ராஜேந்திரனும், காடுவெட்டி குரு தரப்பில் ஸ்ரீகாந்த் மற்றும் சிவக்குமார் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை நீதிபதியிடம் எடுத்துரைத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி கலாவதி, காடுவெட்டி குருவுக்கு ‌‌பிணை ‌விடுதலை வழங்க கோரும் இர‌ண்டு மனுக்களையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்