''இந்தியா இன்னும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நடைபோடப் போகிறது'' என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறினார்.
இந்திய -அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இதன் மூலம் வரலாற்றுப் புகழ் பெற்றதாக மாறியுள்ளது. இதன் மூலம் எதிர்கால இந்தியாவின் மின்தேவை நிறைவேறுவதுடன், உலக நாடுகள் அரங்கில் இந்தியா ஒப்பற்ற நிலைக்கு உயரவும் வழி ஏற்படும் என்று தங்கபாலு கூறினார்.
கடந்த 4 ஆண்டுகளில் சமூகப் பொருளாதார முன்னேற்றம், அனைத்துப் பிரிவு மக்களின் முன்னேற்றம் என மக்களின் எதிர்பார்ப்புகள் ஏராளமாக நிறைவேறியுள்ளன. இன்னும் உள்ள 8 மாதங்களும் முடியும்போது, 5 ஆண்டு கால ஆட்சியில், ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி, புதிய திட்டங்களையும் செய்து தர இருக்கிறோம் என்று கூறிய தங்கபாலு,
இதன்மூலம் இந்தியா "ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நடைபோடப் போகிறது.' உலக அரங்கில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா மாறும். இந்தியாவின் சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையிலான அரசும் பாடுபடும் என்றார்.