காஞ்சிபுரம் அருகில் உள்ள வில்லியம்பாக்கத்தில் இன்று காலை தனது வயல்வெளியில் நடந்துகொண்டிருந்த பா.ம.க. கவுன்சிலர் ஆசை ராஜா என்ற ராஜா மர்மக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்டுள்ள ராஜா மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஏதாவது முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ராஜாவிற்கு இரண்டு மனைவிகள் என்றும், அண்மையில் தனது முதல் மனைவியிடம் திரும்பிய ராஜா அவருடன் வசித்து வந்ததாகவும் காவல்துறையினர் மேலும் கூறினர்.
இன்று காலை தனது மைத்துனர் சுரேஷ் என்பவருடன் வயலில் நடந்துகொண்டிருந்த ராஜாவை மர்மக் கும்பல் வெட்டிச் சாய்த்துள்ளது.