மேட்டூர் அணை நீர்மட்டம் 73 அடியாக இருப்பு!

திங்கள், 14 ஜூலை 2008 (13:17 IST)
திருச்சிராப்பள்ளி: மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 73.110 அடியாக இருந்தது.

அணைக்கு வினாடிக்கு 1,816 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்ட்டா மாவட்ட பாசனத்திற்காக 14,004 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதேபோல் கல்லணையில் இருந்து காவிரிக்கு 963 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றில் 7,006 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுவதாக, பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கா‌வி‌ரி டெ‌ல்டா பாசன‌த்து‌க்காக கடந்த ஜூ‌ன் 12-ஆ‌ம் தே‌தி மே‌ட்டூ‌‌ர் அணையில் இருந்து த‌ண்‌ணீ‌ர் ‌திற‌ந்து ‌விட‌‌ப்பட்டது. அப்போது அணைக்கு விநாடிக்கு 2,912 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் போதிய அளவிற்கு மழை பெய்யாவிட்டால், மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்படும் சூழ்நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்