மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி செயல்பாடு சரியில்லை. உடனடியாக அவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவராக கே.வி.தங்கபாலுவை காங்கிரஸ் மேலிடம் இன்று நியமித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி வெளியிட்டார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரான தங்கபாலு தற்போது சேலம் மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். இவர் ஏற்கனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மட்டுமின்றி குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் மாற்றப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.