திருப்பூரில் உள்ள ஏராளமான சாய பட்டறை ஆலைகளில் வெளியேற்றப்படும் கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலந்து ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையம் அணையில் சேர்ந்து வருகிறது.
இந்த கழிவுநீரை ஆற்றில் விடும் சாயப்பட்டறை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் மாசுகட்டுப்பாடு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து இன்று திருப்பூர் நகர பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள், தமிழக விவசாயிகள் சங்கம், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்திருந்தன. ஆனால் வணிகர்கள் உள்பட பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.
இன்று அதிகாலை வழக்கம் பேருந்துகள் ஓடிக் கொண்டிருந்தது. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் ஏராளமான பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பேருந்து நிலையத்திற்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஒரு பேருந்து மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.