கடலூரில் 8ஆ‌ம் தேதி முதல் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு!

வெள்ளி, 4 ஜூலை 2008 (11:53 IST)
கடலூரில் 8ஆ‌மதேதி முதல் 14ஆ‌மதேதி வரை, தொடர்ந்து 7 நாட்கள் இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு பணி நடக்கிறது. இதில், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்களும், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளலாம்.

இதகு‌றி‌த்தசெ‌ன்னமாவ‌ட்ஆ‌‌‌ட்‌சிய‌ததலைவ‌ரகாக‌ர்லஉஷவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், சென்னை, காஞ்‌சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு ஜூலை 8ஆ‌மதே‌தி முதல் 14ஆ‌மதே‌தி வரை சிப்பாய் பொதுபணி, சிப்பாய் வர்த்தகபணி, சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பணிகளுக்கு இந்திய ராணுவத்திற்கு கடலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அமைப்பு மைதானத்தில் வைத்து ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது.

சிப்பாய் பொதுப் பணிக்கு, 171/2 முதல் 21 வயது (10-7-1987 முதல் 8-1-1991-க்குள் பிறந்திருக்க வேண்டும்) வரை இருக்க வேண்டும். சிப்பாய் வர்த்தகப்பணி, சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் கிளார்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பணிக்கு, 171/2 முதல் 23 வயது (12-7-85 முதல் 10-1-91-க்குள் பிறந்திருக்க வேண்டும்) வரை இருக்க வேண்டும். உயரம் 166 சென்டி மீட்டரும், 50 கிலோ எடையும், மார்பளவு 77-82 செ.மீ. இருக்க வேண்டும்.

சிப்பாய் பொதுப் பணிக்கு, பள்ளி இறுதித் தேர்வில் 45 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிப்பாய் வர்த்தக பணிக்கு, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் கிளர்க் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பணிக்கு, பிளஸ் 2 அல்லது இன்டர்மீடியேட் படிப்பில் ஆங்கிலம், கணக்கு, வேதியியல், இயற்பியல் பாடங்கள் படித்து 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எ‌ன்றமாவட்ட ஆ‌ட்‌சிய‌ரகாகர்லா உஷா தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்