சென்னையில் செப்டம்பர் 15ஆ‌ம் தேதி அரசு கேபிள் டி.வி. சேவை துவ‌க்க‌ம்: காய‌ல் இளவரசு!

வியாழன், 26 ஜூன் 2008 (09:33 IST)
சென்னையில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் சேவை செப்டம்பர் 15ஆ‌ம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க தலைவர் ஆர்.எஸ்.காயல் இளவரசு கூறினார்.

அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் துவங்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது எ‌‌ன்று‌ம் முதல் கட்ட சேவை கோவை, தஞ்சையில் திட்டமிட்டபடி ஜூ'லை 15ஆ‌ம் தேதி முதல் தொடங்கும் எ‌ன்று கூ‌றிய காய‌ல் இளவரசு, இதற்காக சேனல்காரர்களோடு அரசு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது எ‌ன்றா‌ர்.

சென்னையில் அரசு கேபிள் டி.வி. சேவை செப்டம்பர் 15ஆ‌ம் தேதி தொடங்கும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், கட்டண சேனல்களுக்கு எவ்வளவு தொகை செலுத்தப்படவேண்டும் என்பது பற்றி இறுதி முடிவு இதுவரை அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் எடுக்கப்படவில்லை எ‌ன்றா‌ர் காய‌ல் இளவரசு.

மேலு‌‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல், அரசு கேபிள் டி.வி. மாதம் ரூ.40 கட்டணம் வசூல்செய்யும் என்று சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். கேபிள் டி.வி. உரிமையாளர்கள் மாத‌ம் ரூ.175-க்கு மேல் கட்டணம் வசூல் செய்யவில்லை. இப்போது உள்ள கட்டணத்தை விட குறைவாகவே அரசு கேபிள் டி.வி. கட்டணம் இருக்கும். அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனில் எவ்வளவு கட்டணம் என்பதை தமிழக அரசு நிர்ணயம் செய்யும் எ‌ன்றா‌‌ர் காய‌ல் ‌இளவரசு.

டி.டி.எச். நிறுவனத்திற்கு மற்ற மாநிலங்களைபோல கேளிக்கை வரி, ஆடம்பரவரி விதிக்கவேண்டும் எ‌ன்று காய‌ல் இளவரசு, மதுரையில் எந்த சேனலையும் இருட்டடிப்பு செய்யவில்லை எ‌ன்று‌ம் சன் குழுமம் நிகழ்ச்சிகளை அவர்களே கொடுக்க மறுப்பதால் தான் அந்த பகுதியில் சன் குழும நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு இல்லை. அதுவும் டிராய் அமைப்பு மூலம் பெறப்பட்டு விரைவில் வழங்கப்படும் எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்