சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.கங்குலி பொறுப்பேற்றார்!
திங்கள், 9 ஜூன் 2008 (13:24 IST)
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.கங்குலி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.ஷா டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து புதிய தலைமை நீதிபதியாக ஏ.கே.கங்குலி நியமிக்கப்பட்டார்.
கடந்த 19ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழாவில் ஆளுநர் பர்னாலா, ஏ.கே.கங்குலிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக ஏ.கே.கங்குலி பொறுப்பேற்றார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.