2011ல் 3வது அணி அமைத்து ஆட்சி அமைப்போம் - ராமதாஸ்!

ஞாயிறு, 8 ஜூன் 2008 (17:13 IST)
தமிழ்நாட்டில் 2011ல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் 3வது அணி அமைத்து ஆட்சி அமைப்போம் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்!

புதுச்சேரி தமிழ்ச் சங்க அலுவலகத்தில், புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் ராமதாஸின் 4 ஆம் ஆண்டு பணிகள் பற்றிய அறிக்கையை இன்று வெளியிட்டார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியைப் பார்த்துவிட்டார்கள், அதன்பிறகு 40 ஆண்டுகால திராவிடக் கட்சி ஆட்சியையும் மக்கள் பார்த்துவிட்டார்கள்.

அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில் முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணி அமைத்து பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சியை அமைப்போம் எ‌ன்று கூ‌றினா‌ர்.

ம‌ற்றொரு கே‌ள்‌வி‌க்கு ப‌தில‌ளி‌த்த ராமதா‌ஸ், தி.மு.க. ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவு அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலை வரை தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று‌ம், வரும் மக்களவைத் தேர்தலிலும் இதே கூட்டணியில் தேர்தலை சந்திப்போம் என்று‌‌ம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்