கிருஷ்ணசாமி‌க்கு ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கே‌ள்‌வி!

சனி, 7 ஜூன் 2008 (15:30 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி செய‌ல்படு‌த்‌திவரு‌ம் ம‌க்க‌ள் நல‌த்‌தி‌ட்ட‌ங்க‌ள் போ‌ன்று கா‌ங்‌கிர‌ஸ் ஆ‌ட்‌சி செ‌ய்யு‌ம் மா‌நில‌ங்க‌ளி‌ல் செய‌ல்படு‌த்த அ‌றிவுரை வழ‌ங்‌கி‌‌வி‌ட்டு அத‌ற்கு‌ப் ‌பிறகு த‌மிழக அர‌சிற‌்கு ஆலோசனை கூ‌றி‌யிரு‌ந்தா‌ல் அது ‌நியாயமாக இரு‌ந்‌திரு‌க்கு‌ம் எ‌ன்று த‌மிழக கா‌‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌கிருஷ்ணசாமி‌க்கு ஆ‌ற்காடு ‌வீராசா‌மி ப‌தில‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

காங்கிரஸ் கட்சியி‌ன் தமிழ் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி "சமையல் எரிவாயு மீதான விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரிகளை குறைத்து ஆந்திர, டெல்லி முதலமை‌ச்ச‌ர்க‌ள் தங்களது மாநிலங்களில் உத்தரவிட்டுள்ளனர்.

ஆந்திராவில் சமையல் எரிவாயு மீதான விலை உயர்வு முழுவதும் ரத்து செய்யப்பட்டு பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் 10 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. ஆந்திரா, டெல்லி மாநில அரசுகளைப் போல தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்'' என்று அறிக்கை விட்டுள்ளார்.

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு ரூ.5 மற்றும் ரூ.3ம், சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ. 50ம் உயர்த்தி அறிவித்த மறுநாளே தமிழக முதலமை‌ச்சர் கருணாநிதி, நிதித்துறைச் செயலாளரோடு கலந்து பேசி டீசலுக்கு 2 சதவிகித விற்பனை வரியைக் குறைத்துள்ளார்.

இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டி‌ற்கு ரூ. 260 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி அமல்படுத்தி வரும் திட்டங்களான "விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் ரூ.7 ஆயிரம் கோடி தள்ளுபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், குடிசைகளுக்கு இலவச மின்சாரம், கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கி வருவது, பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவில் வாரம் 3 முட்டைகள் வழங்குவது, ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் ரூ.20 ஆயிரம் கொடுப்பது, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.6 ஆயிரம் உதவித் தொகை, தமிழகத்தில் வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் இல்லாத இ‌ல்லாத 60 லட்சம் பேருக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் விநியோகித்தது,

இலவச எரிவாயு மற்றும் சிலிண்டர்கள் 11 லட்சம் பேருக்கு கொடுத்துள்ளது, தமிழகத்தில் விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காக நியாய விலைக் கடைகள் மூலம் சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, மைதா, கோதுமை மாவு போன்ற அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வது, அரசு கலைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் மற்றும் இலவச பஸ் பாஸ் கொடு‌ப்பது" போ‌ன்ற எந்தத் திட்டங்களையும் காங்கிரஸ் ஆட்சி செய்கின்ற ஆந்திராவிலோ, டெல்லியிலோ அல்லது மற்ற மாநிலங்களிலோ அமல்படுத்தவில்லை என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

இதையெல்லாம் அறிந்து வைத்திருக்கின்ற கிருஷ்ணசாமி தமிழகத்தில் தலைவர் கலைஞரால் செயல்படுத்தப்பட்டு வருகின்ற இந்தத் திட்டங்களை எல்லாம் காங்கிரஸ் ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் அமல்படுத்த வேண்டுமென்ற அறிவுரை வழங்கி, அதற்குப் பிறகு தமிழகத்தில் சமையல் எரிவாயுக் கட்டணத்தை உயர்த்தக் கூடாதென்று அறிக்கை விட்டிருந்தால் அது நியாயமாக இருக்கும். அதை விட்டு விட்டு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கான மக்கள் நலத் திட்டங்களை தமிழகத்தில் ஆண்டாண்டு தோறும் தொடர்ந்து அமல்படுத்திக் கொண்டிருக்கும் கலைஞர் ஆட்சிக்கு இத்தகைய இலவச ஆலோசனைகளை வழங்குவது என்ன நியாயம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்