காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயற்சி

வெள்ளி, 6 ஜூன் 2008 (17:15 IST)
ஈரோட்டில் 1400 காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஈரோடு அடுத்துள்ளது எழுமா‌த்தூர். இங்கு 25 ஏக்கர் பரப்பளவில் காவல்துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி நடக்கும் மைதானம் உள்ளது. இங்கு ஒவ்வொறு வருடமும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு துப்பாக்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு சிறப்பு பயிற்சி கடந்த மாதம் 25 நாட்களாக நடந்து வருகிறது. இந்த பயிற்சியில் காவலர்கள் துப்பாக்கிகளை கையாளும் திறன், பிரித்து சேர்ப்பது, குறிப்பிட்ட இலக்கை குறிவைத்து சுடுவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதுவரை ஈரோடு மாவட்டத்தில் 1180 காவலர்கள் இந்த பயிற்சி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு ஆயுதப்படை காவல்துறை துணை கண்காணிப்பாளர் நடராஜன், ஆய்வாளர் நாகிரெட்டி சேகர் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். தற்போது 1400 காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கி மற்றும் தானே இயக்கும் திறன்கொண்ட துப்பாக்கி மற்றும் தற்போதைய நவீன ரக துப்பாக்கிகள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்