லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

வெள்ளி, 6 ஜூன் 2008 (17:15 IST)
ஈரோடு அருகே வாரிசு சான்றிதழ் கொடுக்க நான்காயிரம் ரூபா‌ய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு அருகே உள்ள தாராபுரம் சம்பத் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய நிலத்தை திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டார். இந்த விற்பனை குறித்து பத்திரபதிவு செய்ய தேவைப்படும் வாரிசு சான்றிதழ் மற்றும் சிட்டா ஆகியவை கேட்டு அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி திருமலைநாதனிடம் விண்ணப்பித்தார்.

இதற்கு நான்காயிரம் ரூபா‌ய் லஞ்சம் வேண்டும் என கிராம நிர்வாக அதிகாரி கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த செல்வராஜ் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தாங்கள் கொண்டுவந்த ரசாயன தூள் தடவிய பணத்தை செல்வராஜிடம் கொடுத்து திருமலைநாதனுக்கு லஞ்சம் கொடுக்குமாறு காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த பணத்தை திருமலைநாதன் வாங்கியதும் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் திருமலைநாதனை கைது செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்