விலைவாசி: யோசனைகளை ஏற்கத் தயார்-சிதமபரம்

திங்கள், 2 ஜூன் 2008 (10:34 IST)
நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த ஒரு யோசனையையும் வரவேற்கிறோம் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பாரதியார் பெயரில் கிராம வங்கியை அவர் நெற்று திறந்து வைத்தார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே இருந்து வந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி 9.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் பணவீக்கமும் 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கவலை அளிப்பதாக உள்ளது.

தற்போதைய விலைவாசி உயர்விற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் காரணம். விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்த இறக்குமதியை தாராளமாக அனுமதித்தோம். ஏற்றுமதிக்கு தடை விதித்தோம், மத்திய விற்பனை வரியை 3 விழுக்காட்டிலிருந்து 2 விழுகாடாக குறைத்துள்ளோம்.

விலைவாசி உயர்வை குறைக்க இன்னும் என்னதான் செய்வது? இன்னமும் சிறந்த யோசனைகளை யாராவது கூறுவார்களேயானால் அதனையும் வரவேற்கிறோம்.

இவ்வாறு கூறினார் சிதம்பரம்.

வெப்துனியாவைப் படிக்கவும்