ஒகேனக்கல் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண முயற்சிப்பேன்: வெங்கையா நாயுடு!

புதன், 28 மே 2008 (10:55 IST)
"கர்நாடகத்தில் பதவி ஏற்கும் பா.ஜ.க அரசுடன் பேசி ஒகேனக்கல் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண முயற்சிப்பேன்'' என்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூ‌றினா‌ர்.

செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்த‌ி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், பா.ஜ.க என்றால் வடநாட்டு கட்சி, மதவாத கட்சி, வகுப்புவாத கட்சி என்று முத்திரை குத்தி, பொய் பிரசாரம் மூலம் எங்களது வளர்ச்சியை காங்கிரஸ் போன்ற கட்சிகள் தடுத்து வந்தன. ஆனால் அவைகள் எல்லாம் இன்று முறியடிக்கப்பட்டு விட்டன.

கடந்த 30 ஆண்டு காலமாக கடுமையாக உழைத்து, தற்போது தென்னிந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலத்தில் முதல் வெற்றியை பெற்று உள்ளோம். இது எங்களது கடுமையான உழைப்புக்கு கிடைத்த பலன் ஆகும்.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் 20 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் 12 மாநிலங்களில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். காங்கிரஸ் கட்சிக்கு தோல்விமுகம் தொடங்கி விட்டது.

ஒகேனக்கல் பிரச்சினையை பொறுத்தவரை அது ஒன்றும் தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல. தமிழகத்தில் உள்ள பா.ஜனதா கட்சியினர் தமிழ் நாட்டுக்கு ஆதரவாகவும், கர்நாடகத்தில் உள்ள பா.ஜனதா கட்சியினர் அந்த மாநிலத்துக்கு ஆதரவாகவும் ஒகேனக்கல் பிரச்சினையில் செயல்படுகின்றனர்.

கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைந்த பின்னர் பேச்சு வார்த்தை மூலம் இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண முயற்சிப்பேன். காவிரி பிரச்சினையில் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பது போல ஒகேனக்கல் பிரச்சினையிலும் தீர்வு காண முடியாது என்று சொல்வதை ஏற்க முடியாது எ‌ன்றா‌ர் வெ‌ங்கையா நாயுடு.

வெப்துனியாவைப் படிக்கவும்