மணல் விற்பனையை மீண்டும் தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இதுகுறித்து அரசு பின்பற்ற வேண்டிய கொள்கை பற்றி கலந்து ஆலோசிக்க அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் மே 26ஆம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆற்று மணல் எடுத்து விற்பனை செய்தல் தொடர்பாக அரசு பின்பற்ற வேண்டிய கொள்கை பற்றி கலந்து ஆலோசிப்பதற்காக தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் மே 26ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம், அமைச்சரவை அரங்கில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கான அழைப்பிதழ் சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.