கல்லூரிகளில் கல்விக்கட்டணத்தை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்: கோ.க.மணி!

வியாழன், 22 மே 2008 (09:25 IST)
''கல்விக்கட்டணத்தை குறைக்கக்கோரி மே 26ஆ‌ம் தேதி தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று அ‌க்க‌ட்‌சி தலைவ‌ர் கோ.க.மணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் தற்போது தனியார் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு கல்லூரிகளிலும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கட்டாய நன்கொடையும் கட்டணமும் தாறுமாறாக வசூலித்து கொண்டிருக்கிறார்கள். கல்வி வணிகமாகிவிட்டதால் பெற்றோரும், மாணவர்களும் திணறுகின்றனர்.

ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயங்களை சேர்ந்தவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாகி வருகின்றன. வீட்டையும், நிலத்தையும், உடமைகளையும் விற்று குழந்தைகளை படிக்க வைக்கும் அவல நிலை ஏற்பட்டு வருகின்றது.

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், செவிலியர்- கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்ற அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகிய அனைத்து இடங்களுக்கும் அரசு நிர்ணயித்துள்ள, தற்போது உள்ள கட்டணத்தை குறைக்க வேண்டும் எ‌ன்பதை வ‌லியுறு‌த்‌தி மே 26ஆ‌ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது எ‌ன்றகோ.க.ம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்