அய‌ல்மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல தடை: பழ.நெடுமாற‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!

வியாழன், 22 மே 2008 (09:06 IST)
தமிழகத்திலிருந்து அய‌ல் மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டுமென மக்கள் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ெளியிட்ட அறிக்கை‌யி‌ல், அரசே மணலை விற்பனை செய்வதில் ஊழலும், மணல் கொள்ளையும் நடக்கிறது. தனியாருக்கு அளிப்பதன் மூலம் ஆளுங்கட்சி ஆதரவு பெற்றவர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட வழிவகுக்கும்.

மணல் கொள்ளை, மணல் விலை ஏற்றம் ஆகியவற்றைத் தடுக்க ஒரே வழி, தமிழகத்திலிருந்து அய‌ல் மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல தமிழக அரசு உடனடியாகத் தடை விதிக்கவேண்டும் எ‌ன்று பழ.நெடுமாற‌ன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்