கர்நாடகாவில் நாளை 2ஆம் கட்டதேர்தல்: தமிழக எல்லையில் கடும் சோதனை!

கர்நாடகாவில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்உள்ளதை தொடர்ந்து தமிழக எல்லையில் வாகன‌ங்க‌ள் ‌தீ‌விரமாக சோதனை செ‌ய்ய‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 10ஆ‌ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதன் இரண்டாம் கட்ட தேர்தல் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் பேருந்து மற்ற‌ம் வாகனங்கள் முழுவதும் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், பண்ணாரியில் உள்ள சோதனை சாவடி, ஆசனூரில் உள்ள சோதனை சாவடிகளிலும் பர்கூர், அந்தியூர் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலும் அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனை செய்து அனுப்பப்படுகிறது. மேலும் வாகனங்களின் பதிவு எண்களை காவ‌ல்துறை‌யின‌ர் குறித்து வைத்து அனுப்புகின்றனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவ‌ர் கூறுகை‌யி‌ல், கர்நாடகாவில் நடக்கும் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் இருந்து விஷமிகள் ஊடுருவலை தடுக்கவும், கள்ள வாக்களிக்க ஆட்களை கடத்தி செல்வதை தடுக்கவும் இந்த சோதனை நடத்தப்படுகிறது என்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்