2 ஆ‌ண்டு ஆட்சியில் தமிழர் நலன் காக்கப்படவில்லை: ஜெயல‌லிதா!

வியாழன், 15 மே 2008 (10:21 IST)
ி.ு.க.வின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் தமிழர்களின் நலனும், உரிமையும் பாதுகாக்கப்படவில்லை என அ.இ.அ.ி.ு.க பொதுச்செயலாள‌ர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், அத்தியாவசியப் பொருள்கள் உள்பட அனைத்துப் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஏழை, எளிய நடுத்தர மக்கள் சொந்தமாக வீடு வாங்க முடியாத அவலநிலை. சொத்து வரி, குடிநீர் வரி உயர்வு, குப்பை வரி அறிமுகம். மின் உற்பத்தியில் பின்னடைவு.

நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் மின்சார விடுமுறை. நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி கடத்தல். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு அளித்த கடனை தள்ளுபடி செய்துவிட்டு, தள்ளுபடி செய்த தொகையை வங்கிகளுக்கு அளிக்காததால், நலிவடைந்த வங்கிகள்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் விளை நிலங்களை அபகரித்தல். தோழமைக் கட்சித் தலைவர்கள் தாக்கப்படுதல். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் ஊடுருவல். எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டல்.

பேரு‌ந்து கட்டணம் மறைமுகமாக உயர்வு. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக் கட்டணங்கள் உயரும் அபாயம். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடாமல் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தது. முல்லைப் பெரியாறு அணை மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் அனுமதித்தும் அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமை.

பாலாறு, பொன்னை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் முயற்சியைத் தடுக்காதது, சுய நலத்திற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறுத்தி வைத்தது என திமுக ஆட்சியில் இன்னல்கள் தொடர்கின்றன.

இந்நிலையில், தி.ு.க அரசு சாதனை செய்ததாக விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி அமைந்தால் தமிழக நலன் காக்கப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தி.ு.க, தமிழர்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்கத் தவறிவிட்டது என ஜெயலலிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்