2006ஆம் ஆண்டு தி.மு.க. அரசு பொறுப்பேற்றபோது உணவு உற்பத்தி 61.17 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது என்று தெரிவித்தார் அமைச்சர் ஸ்டாலின்.
1989ஆம் ஆண்டு முதல் தி.மு.க. அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கி வருகிறது. இதனை தற்போது பஞ்சாப், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன என்று ஸ்டாலின் கூறினார்.
விவசாயத்துக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட விவசாயத்துறைக்கு மிக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் கூறினார்.