மே 30‌க்கு ‌பிறகு தமிழகத்தில் மின் தடையே இருக்காது: ஆ‌ற்காடு வீராசாமி!

திங்கள், 12 மே 2008 (11:15 IST)
''காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கி விட்டதால், மே 30ஆ‌ம் தே‌தி‌க்குப் பிறகு தமிழகத்தில் மின் தடையே இருக்காது'' எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌றினா‌ர்.

திரு‌ச்‌சி‌யி‌ல் நே‌ற்று ‌மி‌ன்சார‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், தமிழகத்தில் தற்போது காற்றாலைகள் மூலம் 1000 முதல் 1800 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக தமிழகத்தில் மே 15ஆம் தேதிக்குப் பிறகுதான் காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கும்.

ஆனால், இந்தாண்டு ஏப்ரல் 27ஆம் தேதி முதலே மின் உற்பத்தி தொடங்கி விட்டது. காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி தொடங்கி விட்டதால், இனி வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் பெற தேவையில்லை.

தமிழகத்தை 6 மண்டலமாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு நாள் விடுப்பு வழங்கும் திட்டம் மார்ச் மாதம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.

மின் உற்பத்தியில் தற்போதுள்ள இதே நிலை நீடிக்குமேயானால் தொழிற்சாலைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த சுழற்சி முறையிலான விடுப்பு திட்டம் விரைவில் கை‌விட‌‌ப்படு‌ம்.

காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கி விட்டதால், மே 30ஆ‌ம் தே‌தி‌க்குப் பிறகு தமிழகத்தில் மின் தடையே இருக்காது எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்