முன்னேற்றத்திற்கு நான் முட்டுக்கட்டை போடு‌கிறேனா? ராமதாஸ்!

திங்கள், 5 மே 2008 (10:20 IST)
தமிழக‌த்‌தி‌ன் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாக கூறு‌கிறா‌ர்களே? இது எ‌‌ப்படி ‌நியாய‌ம் எ‌ன்று பா.ம.க ‌நிறுவன‌ர் ராமதாஸ் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் பாட்டாளி தொழிற்சங்க பேரவை சார்பில் நட‌ந்த மேதின விழா பொதுக் கூட்ட‌த்‌தி‌ல், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகை‌யி‌ல், தனியார் மயமாக்கல், தாராள மயமாக்கல், உலக மயமாக்கல் என்று புதுப்புது சுரண்டல்கள் தொழிலாளர்களை தாக்கி வருகின்றது. நீங்கள் வாழும் சமுதாயத்தில் எத்தனை சுரண்டல்கள் உள்ளது என்பதை எண்ணிப்பார்த்து போராட வேண்டும்.

நான் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாக கூறுகிறீர்களே? இது எப்படி நியாயம்?. விமான நிலைய விரிவாக்க திட்டத்தை நான் தடை பண்ணியதாக அவர் கூறினார். விமான நிலைய விரிவாக்கத்திற்காக 5,000 குடும்பங்களை அகற்றப்படுவதை நான் கண்டித்தேன்.

தற்போது தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் 49 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கடந்த 2 ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் எவ்வளவு வேலை கொடுத்து இருக்கிறீர்கள். சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு பதில் சிறு குறு தொழில்களை வளர்க்க முன் வரவேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்