செம்பரம்பாக்கம் ஏரியை விரிவுபடுத்த நிலம் கையப்படுத்தியதற்கு இழப்பீடு தொகையை வழங்க தாமதமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நீதிமன்றத்தில் முழக்கமிட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டது. இதற்காக 1990ஆம் ஆண்டில் செம்பரம்பாக்கம அருகில் உள்ள கிராமங்களான கட்டாரம்பாக்கம், புதுப்பூர், கீழவழுக்கூர்தண்டலம், மேலவழகூர்குப்பம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 200 விவசாயிகளிடம் இருந்து 110 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் கையகப்படுத்தினார்கள்.
விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய நிலத்திற்கு 1 செண்டுக்கு ரூ.100 முதல் ரூ.250 வரை நஷ்டஈடு வழங்குவதாக அரசு அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்த நஷ்டஈடு தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என விவசாயிகள் திருவள்ளூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விவசாயிகளிடம் கையகப்படுத்திய நிலத்திற்கு அரசு செண்டு ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5,000 வரை நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்பளித்தார்.
ஆனால் இது வரை விவசாயிகளுக்கு நஷ்டஈடு அரசு சார்பில் வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்படாமலே வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கு மீண்டும் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்றும் எந்த இறுதி தீர்ப்பும் வழங்கப்படாமல் வழக்கு மீண்டும் ஜீன் 2ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் செம்பரப்பாக்கம் ஏரியை விரிவுபடுத்த கையகப்படுத்திய நிலத்திற்கு உடனடியாக நஷ்டஈடு தொகை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
விவசாயிகளிடம் இருந்து கைப்பற்றிய நிலங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்காமல் 18 வருடங்களாகத இழுத்தடிக்கும் காரணத்தை அரசு உடனடியாக ஆராய்ந்து நஷ்டஈடு வழங்குமா?.
விவசாயிகளுக்கு உரிய காலத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி நஷ்டஈடு வழங்காமல் வழக்கை இழுத்தடிக்கும் அதிகாரிகள் மேல் அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.