சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பிரம்மாண்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், அங்குள்ள மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் வரும் மார்ச் 9-ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை முழுமையாக மூடப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயில்களும் பாதுகாப்பு கருதி மூடப்பட உள்ளன. இருப்பினும், பயணிகளின் வசதிக்காகப் பூந்தமல்லி நெடுஞ்சாலை பக்கம் அமைந்துள்ள நுழைவு வாயில்கள் மட்டும் தொடர்ந்து திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுவதால் இந்த தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மெட்ரோ மூலம் வரும் பயணிகள், இந்த நுழைவு வாயில் மாற்றங்களை கவனித்து தங்களின் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.