பா‌‌ர‌திதாச‌‌‌ன் ‌சிலை‌க்கு அமை‌ச்ச‌ர்க‌ள் ம‌ரியாதை!

செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (17:00 IST)
பாவே‌ந்த‌ர் பார‌திதாச‌‌னி‌ன் 118வது ‌பிற‌ந்த நாளை மு‌ன்‌னி‌ட்டு செ‌ன்னை மெ‌ரினா‌வி‌ல் அமை‌ந்து‌ள்ள அவரது ‌சிலை‌க்கு த‌மிழக அமை‌ச்ச‌ர்க‌‌ள் இ‌ன்று மாலை அ‌ணி‌வி‌த்து ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.

செ‌ன்னை காமராஜ‌ர் சாலை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ள பாவே‌ந்த‌ர் பா‌ர‌திதாச‌ன் ‌‌திருவுருவ‌ச் ‌சிலை‌க்கு அரு‌கி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள பார‌திதா‌ச‌ன் பட‌த்‌தி‌ற்கு அம‌ை‌ச்ச‌ர்க‌ள் அ‌ன்பழக‌ன், ப‌ரி‌தி இள‌ம்வழு‌‌தி, த‌‌ங்க‌ம் தெ‌ன்னரசு, மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் ச‌ற்குணபா‌ண்டிய‌ன், செ‌ன்னை மாநகரா‌ட்‌சி ப‌ணி‌க‌்குழு தலைவ‌ர் சுரே‌ஷ் கும‌ா‌ர், த‌மி‌ழ் வள‌ர்‌ச்‌சி இய‌‌க்குநர் மா.இராசே‌ந்‌திர‌ன், செ‌ய்‌தி ம‌க்க‌ள் தொட‌ர்பு‌த்துறை இணை இய‌க்குந‌ர் (பொறு‌ப்பு) இள‌ங்கோ, துணை இய‌‌க்குநர்க‌ள் ம‌ணி‌க்குமா‌ர், தாமரை‌ச்செ‌ல்வ‌ம், செ‌ய்‌தி‌த்துறை அலுவ‌ல‌ர்க‌ள், செ‌ன்னை மாநகரா‌ட்‌சி மு‌ன்னா‌ள் மேய‌ர் சா.கணேச‌ன், செ‌ன்னை மாநகரா‌ட்‌சி உறு‌ப்‌பின‌ர்க‌ள் ம‌ற்று‌ம் இல‌க்‌‌கிய ஆ‌ர்வல‌ர்க‌ள் செ.அமுத‌‌ன், கார‌ல் மா‌ர்‌க்‌‌ஸ் ஆ‌கியோ‌ர் மல‌ர் தூ‌வி ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்