வ‌ங்க‌ கட‌லி‌ல் 'ந‌ர்‌கீ‌ஸ்' புய‌ல் ‌சி‌ன்ன‌ம்!

செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (13:29 IST)
சென்னையிலிருந்து 550 ி.‌மீ தொலைவிலநிலகொண்டுள்குறைந்காற்றழுத்தாழ்வநிலதீவிரமடைந்தபுயலாமாறியுள்ளது. நர்கீஸஎன்றபெயரிடப்பட்டுள்இந்தபபுயலமேற்கதிசையிலநகர்ந்தவருகிறது. நாகை, ஓங்கோலஇடையஇதகரையைககடக்கலாமஎதிர்பார்க்கப்படுகிறது.

வ‌ங்க‌க் கட‌லி‌ல் உருவா‌கியு‌ள்ள புயல்சின்னம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ, அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், தமிழகத்தின் வடபகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதேபோல், ஆந்திரா, கர்நாடகத்தின் தெற்கு உள்பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் காரணமாக ஒரிசா மாநிலத்திலும் மழை பெய்யக்கூடும். அதோடு பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்