நடு‌க்கட‌லி‌ல் த‌மிழக ‌மீனவ‌ர்களை கட‌த்‌தியது சி‌றில‌‌ங்கா கடற்படை!

செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (10:13 IST)
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை ‌சி‌றில‌ங்கா கடற்படையினர் கடத்தி சென்று யாழ்ப்பாணத்தில் சிறை வைத்துள்ளனர்.

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பனை சேர்ந்த பாத்தியன், வெள்ளைச்சாமி, பிச்சை, சேசு ஆபரணம், செல்வம், அந்தோணி ஆகியோர் நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த ‌சி‌றில‌ங்கா கடற்படையினர், அந்த படகை சுற்றி வளைத்து பிடித்தார்கள்.

பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி, 6 மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர், அவர்களை படகுடன் இலங்கைக்கு கடத்தி சென்று விட்டனர். பின்னர் நெடுந்தீவு காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் 6 மீனவர்களும் ஒப்படைக்கப்பட்டனர். காவ‌ல்துறை‌யின‌ர் அவர்களை கெய்ட்ஸ் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்தி, யாழ்பாணம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீதான வழக்கு மீண்டும் 12ஆ‌ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், அப்போது அவர்களை விடுவிக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிரபராதி மீனவர் கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்