சர‌ப்‌ஜி‌த் ‌சி‌‌ங்‌‌கி‌ன் உ‌யிரை‌க் கா‌க்க கருணா‌நி‌தி வே‌ண்டுகோ‌ள்!

ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (18:09 IST)
பா‌கி‌ஸ்தா‌‌‌‌னி‌ல் தூ‌க்கு‌த் த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள இ‌ந்‌தியரான சர‌ப்‌ஜி‌த் ‌சி‌ங்‌கி‌ன் உ‌யிரை‌க் கா‌க்க உலக நாடுக‌ள் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் ‌விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், "பொதுவாக உலகளவில் தூக்குத் தண்டனை கூடாது என்ற கருத்துடையவன் நான். பல முறை அதனை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறேன்.

சரப்ஜித் சிங் அவர்களைப் பொறுத்த வரையில் அவர் 1991ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சிறையிலே 17 ஆண்டுகளாக வாடி வருகிறார். கடந்த 1 ஆ‌ம் தேதியன்று அவரை தூக்கில் போட முடிவு செய்யப்பட்டதாக செய்தி வந்தது.

அதன் பின்னர் இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க அந்தத் தூக்கு தண்டனை ஏப்ரல் 30 ஆ‌ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்தக் கெடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டதாக முதலில் ஒரு செய்தியும், அந்தச் செய்தி தவறானது என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்திருப்பதாக அதைத் தொடர்ந்து ஒரு செய்தியும் வந்துள்ளது.

வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் மத்திய அரசின் கருத்து எதுவோ, அதற்கு முரண்படாத கருத்துதான் நம்முடைய கருத்தும் என்று நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். சரப்ஜித் சிங் தூக்குத் தண்டனையைப் பொறுத்து உலக நாடுகள் எல்லாம் ஒன்றாக வேண்டுகோள் விடுத்து அவரது உயிரை காத்திட வேண்டுமென்பது நம்முடைய விருப்பமாகும்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்