த‌மிழக‌த்‌தி‌ல் ‌மீ‌ண்டு‌ம் மழை பெய்ய வாய்ப்பு - கணிப்பு!

செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (20:06 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சூழல் உள்ளது என்று மழைராஜ் கூறியுள்ளார்!

இதனால் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உட்பட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

மேலும், இந்தோனேஷியா, அந்தமான், ஜப்பான் ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 8, 13, 18 ஆகிய தேதிகளில் மிதமான மற்றும் கடும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதிகளாகும் எ‌ன்று மழைரா‌ஜ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்