‌சி‌றில‌‌ங்காவு‌க்கு கட‌த்த இ‌ரு‌ந்த ரூ.3.5 ல‌ட்ச‌ம் ‌பீடி ப‌ண்ட‌ல் ப‌றிமுத‌ல்!

செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (11:59 IST)
சி‌றில‌ங்காவு‌க்கு கட‌‌த்த இரு‌ந்த ரூ.3.5 ல‌ட்ச‌ம் ம‌தி‌ப்பு‌ள்ள ‌பீடி ப‌ண்ட‌ல்களை காவ‌ல்துறை‌யின‌ர் ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர்.

‌‌திரு‌ச்‌சி- செ‌ன்னை தே‌சிய நெடு‌ஞ்சாலை‌யி‌ல் நே‌ற்று இரவு காவ‌ல்துறை‌யின‌ர் வாகன ரோ‌ந்து ப‌ணி‌யி‌‌ல் ஈடுப‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர்.

அ‌ப்போது, ‌சிறுகானூ‌ர் எ‌ன்ற இட‌த்த‌ி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் ஈடுப‌ட்டிரு‌ந்தபோது அ‌ந்த வ‌ழியாக வ‌ந்த லா‌ரியை ம‌றி‌த்து சோதனை செ‌ய்தன‌ர். சோதனை‌யி‌ல் ரூ.3.5 ல‌‌ட்ச‌ம் ம‌தி‌ப்பு‌ள்ள ‌பீடி ப‌‌‌ண்ட‌ல் இரு‌ந்ததை க‌ண்டு‌பிடி‌த்தன‌ர்.

இது தொட‌ர்பாக ஐ‌ந்து பேரை கைது செ‌ய்த காவ‌ல்துறை‌யின‌ர், அவ‌ர்க‌ளிட‌ம் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தின‌ர். ‌விசாரணை‌யி‌ல், செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து வா‌ங்‌கி வர‌ப்ப‌ட்ட ‌‌பீடி‌ ப‌ண்ட‌ல் ராமே‌ஸ்வர‌ம் கட‌‌ல் மா‌ர்‌க்கமாக ‌சி‌றில‌ங்காவு‌க்கு கட‌த்த இரு‌ந்தது தெ‌‌ரிய வ‌ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்