சட்ட‌ப்பேரவை‌க்கு வ‌ந்த ஜெயல‌லிதா வெளிநடப்பு!

செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (11:43 IST)
ச‌ட்ட‌ப்பேரவை‌க்கு இ‌ன்று வ‌ந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா, ஒகேன‌‌க்க‌ல் கூ‌ட்டு குடி‌நீ‌ர் ‌தி‌‌ட்ட‌‌ம் ப‌‌ற்‌றி பேச அனும‌தி மறு‌‌க்க‌ப்ப‌ட்டதை க‌ண்டி‌த்து அவை‌யி‌ல் இரு‌ந்து வெ‌ளிநட‌ப்பு செ‌ய்தா‌ர்.

த‌ற்போதநட‌ந்தவரு‌மதமிழக சட்ட‌பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மூ‌‌ன்றநாள் விடுமுறைக்குப் பின் இன்று காலை தொட‌ங்‌கியது. அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா இன்று ‌காலை 9 ம‌ணி‌க்கதிடீரென்று சட்ட‌பேரவைக்கு வந்தார்.

பி‌ன்ன‌ரசட்ட‌பேரவை‌யி‌ல௦உள்ள தனது எதிர்க்கட்சி தலைவர் அறையில் அமர்ந்து இருந்தார். ‌பி‌ன்ன‌ர் 9.30 மணிக்கு சட்ட‌பேரவதொடங்கியதும் ஜெயலலிதா உள்ளே வந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்றார். கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் முத‌லி‌லஎடுத் துக் கொள்ளப்படுவதாக அவை‌ததலைவ‌ரஅறிவித்தார்.

உடனகேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு ஒரு பிரச்சினையை கிளப்பி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து அதன் மீது பேச அனுமதிக்க வேண்டும் ஜெயலலிதாவும், அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து நின்று கூறின‌ர். இத‌ற்கு அவை‌த் தலைவ‌ர் அனுமதி மறுத்தார். கேள்வி நேரம் முடிந்ததும் உங்கள் பிரச்சினை பற்றி ஆய்வு செய்யலாம் என்றார்.

ஆனால் ஜெயலலிதா, அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்கள் இதை ஏற்காம‌ல், ஒத்தி வைப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி கோஷம் எழுப்பியபடி இருந்தனர். தொடர்ந்து ஐ‌ந்து நிமிடம் அவ‌ர்க‌ள் கோஷம் போட்டுக் கொண்டே இருந்தனர்.

இதற்கிடையே கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு அமைச்சர்கள் பதில் அளிக்கத் தொடங்கின‌ர். ஆனால் அ.இ.அ.தி.மு.க. உறு‌ப்‌பின‌ர்க‌ள் தொடர்ந்து கோஷம் எழுப்பியவாறு இருந்தனர். அமைதியாக இருக்குமாறு அவை‌த் தலைவ‌ர் கேட்டுக் கொண்டார். ஆனால் ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஜெயலலிதா வெளிநடப்பு செய்வதாக கூறி அவையை விட்டு வெளியேறினார். அவருடன் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

சட்ட‌ப் பேரை‌யி‌ல் இரு‌ந்து வெளியே வ‌ந்த ஜெயலலிதா செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் பற்றி சட்ட‌ப் பேரவையில் பேச அனுமதி கேட்டோம். ஆனா‌ல் அவை‌த் தலைவ‌ர் எங்களுக்கு பேச அனுமதி மறுத்து விட்டார். இதனா‌ல் எனவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம் எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்