கா‌வி‌ரி உருவாகு‌ம் குடகுமலையை ‌திரு‌ப்‌பி‌க் கே‌ட்போ‌ம்: ‌ஜி.கே.ம‌‌ணி!

வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (19:15 IST)
"கர்நாடகா தொடர்ந்து பிரச்சனை செ‌ய்தா‌ல் எல்லைப் பிரிவினையின் போது த‌மிழக‌ம் இழந்த பகுதியான காவிரி உருவாகும் குடகுமலையை‌த் ‌திரு‌ப்‌பி‌க் கே‌ட்போ‌ம்" எ‌ன்று பா.ம.க. தலைவ‌ர் ‌ஜி.கே.ம‌ணி கூ‌றினா‌ர்.

க‌ர்நாடக‌த்‌தி‌ல் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் ஒகேனக்கல் கூட்டு‌க் குடிநீர்‌த் திட்டத்தை நிறைவேற்ற கோரியும் பா.ம.க. சார்பில் சென்னை மெமோரியல் ஹால் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இ‌ந்த ஆ‌ர்‌ப்ப‌ா‌ட்ட‌த்‌தி‌ற்கு‌த் தலைமை வ‌கி‌த்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பேசுகை‌யி‌ல், "கர்நாடகா தொடர்ந்து பிரச்சனை செ‌ய்தா‌ல் எல்லைப் பிரிவினையின் போது த‌மிழக‌ம் இழந்த பகுதிகளான பெங்களூர், கோலார் தங்கவயல், கொண்டைக்கல், சாம்ராஜ் நக‌ர் ஆகிய பகுதிகளை திருப்பிக் கேட்போம். காவிரி உருவாகும் குடகுமலையும் எங்களுக்கே சொந்தம்" எ‌ன்றா‌ர்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு குடிநீர் வழங்க ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கர்நாடகா, ஒகேனக்கல் பகுதியில் சொந்தம் கொண்டாடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்ட ம‌ணி, "கர்நாடகத்தில் சில நாட்களே முதலமை‌ச்சராக இருந்த எடியூரப்பா ஒகேனக்கல் திட்டத்தை பிரச்சனையாக்கி வருகிறார். பொதுமக்கள் அதை நம்பாமல் சகோதரத்துவ உணர்வுடன் பழக வேண்டும்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்