சட்டப் பேரவையில் இன்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வேளாண்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்தார். அதில், 2008-9ஆம் ஆண்டு 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் ரூ.40 கோடி செலவில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் புதிய சர்க்கரை ஆலைகள் அமைக்க வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியுடன் தோட்டக்கலை விளைபொருட்களை விற்பனை செய்யவும், விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுக்கவும் ஒரு வர்த்தக நிறுவனம் தொடங்கப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.