ஒகேனக்கல் பிரச்சனைக்கு பா.ஜ.க.வே காரணம்: இந்திய கம்யூ. ராஜா குற்றச்சாற்று!
வெள்ளி, 4 ஏப்ரல் 2008 (15:46 IST)
''ஒகேனக்கல ் கூட்ட ு குடிநீர ் திட்டத்த ை நிறைவேற்றுவதில ் தற்போத ு ஏற்பட்டுள் ள பிரச்சனைக்க ு பாரதி ய ஜனத ா கட்சிய ே காரணம ்'' என்ற ு இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் தேசி ய செயலாளர ் ராஜ ா குற்றம்சாற்றினார ். சென்னையில ் இன்ற ு இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் தேசி ய செயலாளர ் ராஜ ா செய்தியாளர்களுக்க ு அளித் த பேட்ட ி வருமாற ு: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 20-வது தேசிய மாநாடு ஐதராபாத்தில் நல்ல படியாக நடந்து முடிந்தது. மாநாட்டில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது இந்திய அளவில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு மத்திய அரசே காரணம். அவர்களின் தவறாக கொள்கையே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம். இதை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் ஏப்ரல் 17, 18 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை போராட்டமாக நடத்தப்படும். அதோடு மறியல் போராட்டமும் நடைபெறும். கடந்த பாரதிய ஜனதா கட்சியின் பொது வினியோக முறையில் ஒரு திருத்தம் கொண்டு வந்தனர். அதனை தற்போது உள்ள மத்திய அரசு மாற்றி அமைக்கவில்லை. இதனாலேயே விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் மத்திய அரசின் அணுகுமுறை சரியில்லை. இதனை சுட்டிக் காட்டுவது எங்கள் கடமை. மத்திய அரசிடம் தொலைநோக்கு அணுமுறை இல்லை. பொது நோக்கோடு விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு தவறி விட்டது. பொது வினியோக முறையில் எந்த மாற்று நடவடிக்கையும் இல்லை. அத்தியாவசிய பொருட்களை சலுகை விலையில் கொடுக்க பொது வினியோக முறை மிகவும் மோசமாக உள்ளது. விலை உயர்வால் சாதார மக்கள் மட்டுமின்றி மாதச் சம்பவம் வாங்கும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தி மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். ஒகேனக்கல் பிரச்சனைக்கு பா.ஜ.க.வே காரணம்! மழை அளவு மிகவும் குறைந்த மாவட்டங்களில் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளன. இங்குள்ள நிலத்தடி நீரை நிபுணர்கள் பல முறை ஆய்வு செய்து பார்த்துள்ளனர். இங்குள்ள நீரில் புளோடுரைடு நைட்டைட் என்ற நச்சுப் பொருட்கள் 20 விழுக்காடு கலந்துள்ளது. இந்த நிலை குடிப்பதில் அங்குள்ள மக்களின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நீரை 30 லட்சம் மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என்பது நீண்ட கால திட்டமாகும். இதனை நிறைவேற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுக்கு முன்பு அதாவது 1998-ம் ஆண்டு மத்திய நீர்வளத்துறை, கர்நாடக அரசு, தமிழக அரசு ஆகியவை ஒன்று சேர்ந்து ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். ஒகேனக்கல் திட்டம் மூலம் விவசாயம் செய்யவோ, மின்சாரம் தயாரிக்கவோ இல்லை. குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று தமிழக அரசு தெளிவாக கூறியிருக்கிறது. குடிநீருக்கு பயன்படும் திட்டத்திற்கு கர்நாடக பாரதிய ஜனதா கட்சிதான் எதிர்ப்பு தெரிவித்து பிரச்சனையை ஏற்படுத்தி விட்டது. ஒரு நாடு ஒரு ரத்தம் என்ற சுயநலத்துடன் பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. சுய நலத்துடன் பிரச்சனையை ஏற்படுத்தி விட்டு மாநிலத்துக்கு இடையே வன்முறை ஏற்பட காரணமாகி விட்டது. பாரதிய ஜனதா கட்சியும் மத்திய தலையிட்டு இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த பிரச்சனையில் மத்திய அரசு உடனே தலையிட்டு சமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும். மாநிலங்களுக்கிடையே வன்முறை என்பது பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும். இதற்கு நிரந்தரமாக ஒரு அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். மும்பை, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் மற்ற மாநில மக்கள் வாழ முடியவில்லை. மும்பையில் உத்தர பிரதேசம், பீகார் மக்களுக்கு எதிரான வன்முறை தற்போது ஏற்பட்டது. இதற்கு மக்களிடையே தேசிய ஒருமைப்பாடு இல்லாமல் போனதே காரணம். கர்நாடகா- தமிழகத்துக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு ஆக்கப்பூர்வமாக முயற்சி எடுக்க வேண்டும். மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த தேசிய ஒருமைக்குழுவை அமைத்து கருத்தொற்றுமையை உருவாக்க கூட்டம் நடத்தப்பட வேண்டும். நெய்வேலி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்! நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகாலமாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். தற்போது பணி நிரந்தம் செய்யக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் நிர்வாகத்தின் பேச்சுவார்த்தை நடத்தாமல் அலட்சிய போக்குடன் நடந்து வருகிறது. அங்கு நிரந்தரமாக வேலைக்கு அமர்த்தப்படும் ஊழியர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனை நிறைவேற்றாமல் என்.எல்.சி. நிர்வாகம் பிடிவாத போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதில் தமிழக அரசு விரைந்து தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அணுசக்தி ஒப்பந்தத்தில் எங்களின் நிலைபாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. இதையும் மீறி மத்திய அரசு இதை நிறைவேற்ற முயன்றால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ராஜா கூறினார். பின்னர் செய்தியாளர்கள், 3வது அணி அமைப்பது குறித்து தமிழகத்தில் உள்ள தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளீர்களா என்று ராஜாவிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, பாரதிய ஜனதா, காரங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் எங்கள் எங்கள் அணியுடன் வரலாம் என்று பதில் அளித்தார் ராஜா.
செயலியில் பார்க்க x