வேளாண் துறையில் 1,707 உதவி அலுவலர் ‌விரை‌வி‌ல் நியமனம்: வீரபாண்டி ஆறுமுகம்!

செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (10:12 IST)
வேளாண் துறையில் விரைவில் 1,707 உதவி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சட்டப் பேரவையில் பா.ம.க. உறு‌ப்‌‌பின‌ர் வேல்முருகன், வேலை இல்லாத வேளாண் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை அளிக்க வேண்டும் எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறுகை‌யி‌ல், வேளாண்துறையில் 1,707 உதவி அலுவலர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதற்கு முதல்வர் கருணாநிதி ஒப்புதல் அளித்து விட்டார்.

மழையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட மு‌ந்‌தி‌ரி ப‌யிறு‌க்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் என்ற அடிப்படையில் முந்திரி விவசாயிகளுக்கு நிவாரணம் தர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் கோரினேன் எ‌ன்று ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்