பயணிக‌ள் இரயில் கட்டண குறைப்பு இன்று முதல் அமல்!

செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (09:52 IST)
பட்ஜெட்டில் அறிவித்தபடி ரயில் டிக்கெட் கட்டண குறைப்பு இன்று (ஏ‌ப்.1ஆ‌ம் தே‌தி ) முதல் அமலா‌கிறது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் கூடுதல் தொகையை திரும்ப பெறலாம் எ‌ன்று தெ‌ற்கு இர‌யி‌ல்வே அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பயணிகள் ரயில், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டிகளில் கட்டணம் 5 ‌விழு‌க்காடு குறைக்கப்பட்டுள்ளது. 50 ரூபாய்க்கு மேற்பட்ட டிக்கெட் கட்டணத்துக்கு மட்டும் இச்சலுகை பொருந்தும்.

50 ரூபாய்க்கு குறைவான கட்டணங்களுக்கு ஒருவருக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில்களில் 2-ம் வகுப்பு கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. முக்கிய ரயில்களில் ஏ.சி. ரயில் கட்டணம் 2 வகையாக வசூலிக்கப்படுகிறது.

அதன்படி செவ்வாய்கிழமை (இ‌ன்று) முதல் ூலை 31ஆ‌ம் தேதி வரையும், செப்டம்பர் 1‌ஆ‌ம் தேதி முதல் ஜனவரி 31ஆ‌ம் தேதி வரை சீசன் காலமாக கருதப்படும். பிப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரையும், ஆகஸ்‌ட் 1 முதல் ஆகஸ்‌ட் 31ஆ‌ம் தேதி வரை சீசன் அல்லாத காலமாகவும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் ரயில் கட்டணம் குறைக்கப்பட்டு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய ரயில்களில் சீசன் காலத்தில் முதல் வகுப்பு ஏ.சி. கட்டணம் 3.5 ‌விழு‌க்காடு குறைக்கப்பட்டுள்ளது. பிற ரயில்களில் சீசன் அல்லாத காலங்களில் 7 ‌விழு‌க்காடு, சீசன் காலத்தில் 3.5 வ‌ிழு‌க்காடு‌ டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய ரயில்களில் 2 அடுக்கு ஏ.சி. பெட்டியில் சீசன் காலத்தில் 2 ‌விழு‌க்காடு‌ கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சீசன் அல்லாத காலத்தில் 4 ‌விழு‌க்காடு‌ம், சீசன் காலத்தில் 2 ‌விழு‌க்காடு‌ம் குறைக்கப்படுகிறது.

அதிக இருக்கைகள், படுக்கைகள் கொண்ட ரயில்களுக்கான கட்டண விவரம் :

81 படுக்கைகள் கொண்ட ரயில் பெட்டியில் 2-ம் வகுப்பு கட்டணம் அனைத்து சீசன்களும் 6 ‌விழு‌க்காடு குறைக்கப்பட்டுள்ளது. 102 இருக்கைகள் கொண்ட ஏ.சி. பெட்டியில் ஒரு பயணிக்கான கட்டணம் சீசன் காலத்தில் 5 ‌விழு‌க்காடு‌ம், சீசன் அல்லாத காலத்தில் 10 ‌விழு‌க்காடு‌ம் குறைக்கப்பட்டுள்ளது.

72 படுக்கைகள் கொண்ட 3 அடுக்கு ஏ.சி. பெட்டியில் சீசன் காலத்தில் 5 ‌விழு‌க்காடு‌ம், சீசன் அல்லாத காலத்தில் 10 ‌விழு‌க்காடும் குறைக்கப்பட்டுள்ளது. ரயில்களில் 2-ம் வகுப்பு கட்டணம் 6 ‌விழு‌க்காடு‌ம், 3 அடுக்கு ஏ.சி. பெட்டி கட்டணம் 5 ‌விழு‌க்காடு‌ம், ஏ.சி. இருக்கை கட்டணம் 5 ‌விழு‌க்காடு‌ம் குறைக்கப்பட்டுள்ளது.

இது போல சதாப்தி எக்ஸ்பிரஸ், ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ், ஏழைகள் ரதம், ராஜ்தானி மற்றும் சீசன் ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் சீசன் அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களை அணுகலாம்.

கட்டணம் குறைப்புக்கு முன்னர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால் ரயில்வே துறை விதியின் படி வித்தியாசப்படும் கட்டண தொகை ரயில்வே விதியின் படி திரும்பித்தரப்படும். இந்த கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது எ‌ன்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்