‌‌ம‌க்களை‌ப் பாதுகா‌க்க நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌‌ம்: ஜெயல‌லிதா!

ஞாயிறு, 30 மார்ச் 2008 (14:46 IST)
கிரு‌ஷ்ண‌‌கி‌ரி அருகஇரு‌ப்பு‌பபாதை‌யி‌லகு‌ண்டவெடி‌த்தத‌ற்கக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ள அ.இ.அ.‌ி.ு.க. பொது‌சசெயல‌ரஜெயல‌லிதா, தமிழக மக்களின் பாதுகாப்பிற்குத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி தன் கவனத்தை செலுத்த வேண்டும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

29.3.2008 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி- தாசம்பட்டி இடையே பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 11.25 மணிக்கு கடந்து சென்ற சில நிமிடங்களில் கேரிகப்பள்ளி ரயில்வே கேட்டிற்கு அருகே ரயில் தண்டவாளத்தில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது.

பின்னர் இது குறித்து நடைபெற்ற விசாரணையில், ரயில் தண்டவாளங்களை இணைக்கும் பகுதியில் கம்பியால் கட்டப்பட்டிருந்த 13 டெட்டனேட்டர் குச்சிகளில் ஆறு டெட்டனேட்டர் குச்சிகள் வெடிக்கப்பட்டதும், மீதமுள்ள 7 குச்சிகள் வெடிக்காமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அதிர்ஷ்டவசமாக, கடவுளின் கருணையால், ரயிலில் பயணம் செய்தவர்கள் இந்தக் குண்டு வெடிப்பிலிருந்து தப்பித்திருக்கின்றனர். மேற்படி இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டெட்டனேட்டர் குச்சிகள் தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதாகவும், இந்த குண்டு வெடிப்பில் நக்சலைட்டுகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

எனது ஆட்சிக் காலத்தில் இதே இடத்தில்தான் நக்சலைட்டு அமைப்பின் தலைவர் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும், நக்சலைட் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை இந்த மாவட்டத்தில் அறவே ஒழிக்கும் வண்ணம் இந்தப் பகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

விடுதலைப்புலிகள், தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதை மேலும் ஊர்ஜிதப்படுத்தும் விதமாக தற்போது கிருஷ்ணகிரி அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதற்குக் காரணமாக இருக்கும் தி.மு.க. அரசுக்கும், முதலமைச்சர் கருணாநிதிக்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட புழல் சிறைச்சாலை, தமிழ்நாடு காவல் பயிற்சிக் கழகம் ஆகியவற்றை தான் தொடங்கியது போல் தம்பட்டம் அடித்துக் கொள்வதை நிறுத்தி விட்டு, தமிழக மக்களின் பாதுகாப்பிற்குத் தேவையான, உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் கருணாநிதி தன் கவனத்தை செலுத்த வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இ‌வ்வாறு ஜெயல‌லிதா தனது அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்