தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சாட்சியை அழ‌கி‌ரி ‌மிரட்டினாரா? டி.ஜி.பி. மறு‌ப்பு!

வெள்ளி, 28 மார்ச் 2008 (10:34 IST)
"தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சாட்சி மிரட்டப்படுவதாக ஜெயலலிதா சொல்வது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு'' என்று த‌மிழக காவ‌ல்துறை தலைமை இ‌ய‌க்குன‌ர் ராஜே‌ந்‌திர‌ன் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது ‌கு‌றி‌த்து தமிழக காவ‌ல்துறை தலைமை இ‌ய‌க்குன‌ர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மு‌ன்னா‌ள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் முத்துராமலிங்கத்தின் மகன் முன்ஜாமீன் கோரியுள்ள நிலையில் அவரது மகனை ஒப்படைக்கும்படி காவ‌ல்துறை மிரட்டுவதாகவும், இதனால் அவர் குடும்பத்தினருக்கு ஆபத்து நேரிட வாய்ப்புள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

ஜெயலலிதா கருத்துப்படி, முத்துராமலிங்கத்தின் மகன் மீது பொய் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. பாதிக்கப்பட்டவரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அரசு சாட்சியாகவே முத்துராமலிங்கம் இருந்து வருவதால், அவரை காவ‌ல் துறையினர் மிரட்ட அவசியம் எழவில்லை. மேலும், அவர் அந்த வழக்கில் சாட்சி அளிப்பதில், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கருதி பாதுகாப்பு கோரி மனு கொடுத்தால், அவருக்கு தக்க பாதுகாப்பு அளிக்கப்படும்.

பொய் வழக்கு போடுவதாக காவ‌ல் துறை மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது, பாதிக்கப்பட்ட மக்களின் புகாரின் அடிப்படையில் எடுக்கும் நடவடிக்கைகளை பாதிக்கும். காவ‌ல் துறை மீது மக்கள் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயத்தையும் பாதிக்கும் எ‌ன்று காவ‌ல்துறை தலைமை இ‌ய‌க்குன‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்