இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு வைப்புத் தொகை, குடிநீர் உபயோகக் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதோடு, சொத்து வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகமாக வரி போடுவதில் மட்டும் அக்கறையாக உள்ள திருச்சி மாநகராட்சி நிர்வாகம், மக்கள் பிரச்சினைகளைக் கண்டு கொள்வதே இல்லை.
திருச்சி மாநகரில், சுகாதாரக்கேடு நிலவுவதோடு, துப்புரவுப் பணியாளர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக உள்ளதாகவும், கி.ஆ.பெ. விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததால் போதுமான மருத்துவ சேவை கிடைக்கவில்லை.
இதனால், திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 10 மணியளவில், திருச்சி சந்திப்பு காதி கிராப்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.