ரயில் தடம் புரண்ட விபத்து: விசாரணை தொடக்கம்!
சனி, 22 மார்ச் 2008 (20:04 IST)
மதுரை-கொல்லம் பயணிகள் இரயில் தடம் புரண்டது தொடர்பான சட்டப்பூர்வமான விசாரணை இன்று தொடங்கியது.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை தென்னக ரயில்வேயின் திருவனந்தபுரம் பிரிவில் மதுரை-கொல்லம் பயணிகள் இரயிலின் 7 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
வள்ளியூர்-ஆரல்வாய்மொழி இடையே ஏற்பட்ட இந்த இரயில் விபத்தை தொடர்ந்து அந்த வழியாக செல்லக்கூடிய பயணிகள், விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு, சில ரயில்கள் மாற்று வழியில் விடவும் ஏற்பாடு செய்யப்பட்டது
இந்த விபத்து குறித்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு இன்றும் நாளையும் விசாரணைநடத்துகிறார்.அவர் ரயில்வே அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஊழியர்கள், ரயில் ஓட்டுனர், பொதுமக்களிடம் இந்த விசாரணையை இன்று நடத்தி வருகிறார்.
விபத்துக்கான காரணம் என்ன என்ற நோக்கிலும், இதுபோன்ற விபத்துக்களை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் இந்த விசாரணை நடைபெற்று வருவதாக திருவனந்தபுரம் மண்டல ரயில்வே மேலாளர் டைட்டஸ் பி. கோஷி கூறினார்.