தமிழகத்தில் கனமழைக்கு 11 பேர் பலி

சனி, 22 மார்ச் 2008 (10:45 IST)
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கமழையின் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கன்னியாகுமரி மற்றும் மாலத்தீவு கடலபகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்து, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தின் தெனமாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து கொண்டவருகிறது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டமற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, தென் தமிழகத்தில் பெய்தவரும் தொடர்மழையால், பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. அணைகளில் நீர் நிரம்பி வழிந்தும் காணப்படுகின்றன.

மதுரை அருகே உள்ள வைகை அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து இருக்கின்றது. நேற்று மாலை நிலவரப்படி வைகை அணையில் 66.5 அடி தண்ணீர் உள்ளது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 72 அடி. அணைக்கு விநாடிக்கு 5,200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் அணையில் இருந்து எந்த நேரமும் தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்ற நிலை உள்ளது. வைகை ஆற்றின் கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, தஞ்சை, கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நேற்று பலத்த மழபெய்ததால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன; பயிர்களசேதமடைந்துள்ளன.

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி உள்ளிட்ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளமசூழ்ந்துள்ளதால், ஆற்றையொட்டி வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாஅளவில் கடந்த இரு நாட்களாக மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால், உப்பு உற்பத்தி செய்யும் உப்பளங்களில் நீர் தேங்கி உள்ளது. இவை பெரும் பாதிப்புக்குள்ளாயின.

இம்மாவட்டங்களில் போக்குவரத்து வெகுவாபாதிக்கப்பட்டிருப்பதால், நிவாரணப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகம் மற்றுமபுதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு கனத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையிலும் அடுத்த 48 மணி நேரங்களுக்கு மழநீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கன மழையினாலஏற்பட்டுள்ள சேதங்களுக்கு உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்தமாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்