தமிழகத்தில் இருந்து காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், மார்க்சிஸ்ட் சார்பில் டி.கே.ரங்கராஜன், அ.இ.அ.தி.மு.க. சார்பில் நா.பாலங்கா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களைத் தவிர கே.பத்மராஜன், இளங்கோ யாதவ், நீலமேகம் யாதவ், வீரமணி யாதவ் ஆகியோரும் சுயேச்சைகளாக மனுதாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனுக்கள் அனைத்தும் நேற்று தேர்தல் அதிகாரி எம்.செல்வராஜ் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டன. சுயேட்சை வேட்பாளர்கள் 4 பேருமே டெபாசிட் பணம் கட்டவில்லை. அதோடு அவர்களை எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் முன்மொழியவில்லை. இதனால் அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மற்ற 6 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்கள் வெற்றி பெறுவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது என்றாலும் அதிகாரப்பூர்வமாக மனுவை வாபஸ் வாங்குவதற்கான இறுதி நாளான 19ஆம் தேதி தான் அறிவிக்கப்படும்.