மாநிலங்களவை தேர்தல்: காங். வேட்பாளர்கள் நாளை மனுத் தாக்கல்!
வெள்ளி, 14 மார்ச் 2008 (16:45 IST)
மாநிலங்களவ ை தேர்தலில ் தமிழகத்தில ் இருந்த ு காங்கிரஸ ் கட்ச ி சார்பில ் போட்டியி ட உள் ள வேட்பாளர்கள ் நாள ை மனுத ் தாக்கல ் செய் ய உள்ளனர ். மாநிலங்களவ ை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 5 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் தி.மு.க., காங்கிரசுக்க ு தலா 2 இ ட ங்களும ், மார்க்சிஸ ் ட ் கம்யூனிஸ ் ட ் கட்சிக்க ு ஒர ு இடமும ் ஒதுக்கப்பட்டுள்ளத ு. தி.மு.க. வேட்பாளர்கள் வழக்கறிஞர ் ஜின்னா, வசந்தி ஸ்டான்லின், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் நா.பாலங்கா ஆகியோர் கடந்த 12ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர். மார்க்சிஸ ் ட ் வேட்பாளர் டி.கே.ரங்கராஜன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் நாளை மன ு த ் தாக்கல ் செய்கின்றனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ள மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் முதலமைச்சர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியையும் சந்தித்தார். அப்போது அவர் ஜி.கே.வாசனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், மாநிலங்களவை தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக போட்டியிட தனக்கு வாய்ப்பளித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாகாந்திக்கு தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
செயலியில் பார்க்க x