மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 5 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் தி.மு.க., காங்கிரசுக்கு தலா 2 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.கே. ரங்கராஜன் இன்று சட்டசபை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான செல்வராஜியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது ரூ.5,000 கொடுத்து உறுதி மொழி எடுத்து கொண்டார்.