10ஆ‌ம் தே‌தி இறுதி வாக்காளர் பட்டியல் வெ‌ளி‌யீடு: நரேஷ்குப்தா!

சனி, 8 மார்ச் 2008 (11:07 IST)
''தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் மா‌ர்‌ச் 10ஆ‌ம் தேதி வெளியிடப்படும்'' என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.

கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் உள்பட 5 மாவட்ட ஆ‌ட்‌சிய‌‌ர்க‌ளி‌‌ன் ஆலோசனைக்கூட்டம் கோவை மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தலைமை தாங்கினார்.

கூட்டம் முடிந்ததும் நரேஷ்குப்தா செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியின் பெரும் பகுதி முடிவடைந்து விட்டது. காஞ்‌சிபுரம் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது.

இதில் ஏதேனும் திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால் வாக்காளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த திருத்தம் முடிவடைந்து மா‌ர்‌ச் 10ஆ‌ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 97.9 ‌விழு‌க்காடு வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் எ‌ன்று நரே‌‌ஷ் கு‌ப்தா கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்