இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிங்கள மீனவர்கள் 21 பேரும் விசாரணைக்குப் பிறகு இன்று மாலை விடுவிக்கப்படுகின்றனர்.
நாகப்பட்டணம் அருகில் இந்திய கடல்பகுதியில் 4 மீன்பிடி படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 சிங்கள மீனவர்களைக் கடலோரக் காவல் படையினர் பிடித்தனர்.
பின்னர் அவர்களை சென்னை காசிமேட்டிற்குக் கொண்டுவந்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் தாங்கள் எந்த உள்நோக்கத்துடனும் வரவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை மன்னித்து அனுப்புவது என்று அரசுக்கு ஆட்சியர் சிபாரிசு செய்தார்.
தற்போது, 21 சிங்கள மீனவர்களும் ராயபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு உத்தரவு வந்த பிறகு அவர்கள் இன்று மாலை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அவர்களின் நவீன விசைப் படகுகளும் ஒப்படைக்கப்படும்.