இதேபோல, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் தனிப் பிரிவு ஆய்வாளர் செல்வம், உதவி ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், குணசேகரன் ஆகியோர் மல்லூரை அடுத்த அம்மம்பாளையம் ஏரிக்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு லாரியும், அதற்கு பின்னால் ஒரு `மினி' லாரியும் வந்தது. இந்த 2 லாரிகளையும் சோதனை செய்தபோது, அவற்றில் மொத்தம் 200 மூட்டை ரேசன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ரேசன் அரிசி மூட்டைகளை கடத்திய சவுந்தர ராஜன் என்ற ராஜா (வயது 30), லாரி ஓட்டுநர் சேகர் (34), லாரி கிளீனர் குமார்(23), மினி லாரி ஓட்டுநர் ஏசு (25) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் 400 மூட்டை பறிமுதல்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் ராஜாராம், வட்டாச்சியர் தனசேகரன், தனித் துணை ஆட்சியர் கோவிந்தராஜ், காவல்துறை உதவி ஆய்வாளர் வேல் முருகன் ஆகியோர் இன்று காலை, தும்மக்குண்டு பிரிவு அருகில் ஒரு லாரியை மறித்து சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்தவர்கள் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
அந்த லாரியைச் சோதனையிட்ட போது அதில் 400 மூட்டை ரேசன் அரிசி இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தப்பி ஓடிய கும்பலைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.