பறவைக் காய்ச்சல் பீதி: நாம‌க்க‌ல்‌லி‌ல் 5 கோடி முட்டைகள் தேக்கம்!

சனி, 19 ஜனவரி 2008 (16:20 IST)
பறவைக் காய்ச்சல் பீதி‌யி‌ன் காரணமாக குவைத், மஸ்கட் உ‌ள்‌ளி‌ட்ட ‌சில அய‌ல்நாடுக‌ள் இந்திய முட்டைகளு‌க்கு‌த் ‌திடீ‌ர் தடை விதி‌த்து‌ள்ளன. இதனா‌ல் நாம‌க்க‌‌ல்‌லி‌ல் சுமார் 5 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக ஏ‌ற்றும‌தியாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

மேற்குவங்க‌த்தில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து நாடு முழுவதும் மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், முட்டை ஏற்றுமதியாளர்கள் கூறுகை‌யி‌ல், "நாமக்கல்‌லி‌ல் இருந்து நாள்தோறு‌ம் 65 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதால் உலக சுகாதார அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஓமன், குவைத், மஸ்கட் நாடுகள் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளன. இதன் காரணமாக பண்ணைகளில் முட்டை எடுப்பதை நிறுத்தியுள்ளோம்.

இதனா‌ல் பண்ணைகளில் சுமார் 5 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. சுகாதார அமைப்பில் உறுப்பினராக இல்லாத ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழக்கம்போல் முட்டை சப்ளை செய்யப்படுகிறது." எ‌ன்ற‌ன‌ர்.

கோழிப் பண்ணையாளர்கள் கூறுகை‌யி‌ல், "வளைகுடா நாடுகள் இந்திய முட்டை இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன. பூட்டானுக்கு வாரத்துக்கு 30 டன் முட்டைதான் செல்கிறது. எனவே இந்த நாட்டில் தடை விதித்தால் பெரிய அளவில் முட்டை தேங்காது. துபாய்க்கு நாள்தோறும் 10 லட்சம் முட்டையும், மஸ்கட், ஓமனுக்கு 1 லட்சம் முட்டையும் அனுப்பப்படுகின்றன. இந்த நாடுகள் தடை விதித்துள்ளதால் முட்டைகள் தேக்கமடைய தொடங்கியுள்ளன.

பொங்கல் பண்டிகைக்காக கடந்த 4 நாட்கள் பண்ணைகளுக்கு விடுமுறை விடப்பட்டன. இதனால் பண்ணைகளில் முட்டை அடுக்கும் தொழிலாளர்கள் வராததால் முட்டைகள் தேங்கியதுபோல தோற்றம் உள்ளது. ஆனால் கேரளாவுக்கு வழக்கம்போல் மருத்துவச் சான்றுடன் முட்டை சப்ளையாகிக் கொண்டிருக்கின்றன. சில வியாபாரிகள் கூட்டணி அமைத்து முட்டை விலையை குறைக்க முயற்சித்து வருகின்றனர். 15 நாட்களில் இந்த நிலைமை சரியாகி விடும்" எ‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்