வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம்: ஏப்ரல் 1‌ல் துவ‌க்க‌ம்!

சனி, 12 ஜனவரி 2008 (10:00 IST)
3வது க‌ட்டமாக 20 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் தமிழ்நாட்டில் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் ஏப்ரல் 1ஆ‌ம் துவங்குகிறது என்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இது கு‌‌றி‌த்து வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டு‌ள்ள த‌மிழக அர‌சித‌ழி‌‌ல், மத்திய அரசின் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் முதல் கட்டமாக 2006ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2ஆ‌ம் தேதி தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது.

2-வது கட்டமாக தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆ‌‌ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 10 மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

எஞ்சியுள்ள அரியலூர், தர்மபுரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாமக்கல், வேலூர், தூத்துக்குடி, விருதுநகர், சேலம், ஈரோடு, திருச்சி, காஞ்‌சிபுரம், தேனி, திருவள்ளூர், மதுரை, நீலகிரி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி ஆ‌கிய 20 மாவட்டங்களிலும் இந்த திட்டம் ஏப்ரல் 1ஆ‌ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களிலும் இந்த வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் அமல்படுத்தத் துவ‌ங்‌கி விட்டால் தமிழகம் முழுவதும் (சென்னை தவிர) அனைத்து ஊரகப் பகுதிகளிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிடும். இதன் மூலம் கிராமப்பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்